அஸ்ஸாமில் பலத்த மழை வெள்ளச் சேதத்தால் மோசமடைந்த இயல்பு வாழ்க்கை
அஸ்ஸாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக சுமார் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 56 பேர் உயிரிழந்த நிலையில், 23 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தால் சாலைகள் மின்சாரம் தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்த சுமார் 4 லட்சம் பேர் 515 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாரக் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வனவிலங்குகளும் கால்நடைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
Comments