திருவண்ணாமலையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பர்ஸைத் திருடி போலீசிடம் சிக்கிய 2 பெண்கள்

0 489

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் பர்ஸை திருடி தப்ப முயன்ற இரு பெண்கள், நடத்துநரின் சாமர்த்தியத்தால் போலீசில் சிக்கினர்.

ஆரணியிலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் காஞ்சிபுரத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டு  இருமந்தாங்கலில் இறங்கியதால் சந்தேகமடைந்த நடத்துனர் அவர்களுக்கு அருகில் கைக்குழந்தையுடன் அமர்ந்துவந்த சங்கீதா என்ற பெண்ணிடம் உடைமைகளை சரிபார்க்கும்படி கூறியுள்ளார்.

சங்கீதா தமது பையை பார்த்து அதில் ஒரு சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 2 ஆயிரம் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை என கூறி பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்.

அங்கிருந்து இருமந்தாங்கல் பேருந்து நிறுத்தம் வந்த சங்கீதா வேறு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற  திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ஈஸ்வரி,  நந்தினி ஆகியோரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments