படிக்கிற வயசுல இது தேவையா ? இன்ஸ்டா “வீடியோ காலில் லவ்” மிரட்டிய ஃபைனான்ஸியர் கொலை..! கூலிப்படை ஏவிய மாணவியின் தந்தை

0 1036

திருப்பூரில், இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 24 வயது இளைஞரை, மாணவியின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த புவனேஸ்வரன் , ஏ.வி.பி. லே அவுட் பகுதியில் மர்மக்கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

சந்தேகத்தின் அடிப்படையில், கொலையான புவனேஸ்வரன் உடன் அண்மையில் சண்டையிட்ட திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரின் தந்தையை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், 24 வயதான புவனேஸ்வரன் இன்ஸ்டா கிராம் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து அவர்களை வீடியோ காலில் ஆபாசமாக தோன்ற வைத்து அந்த வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான திருப்பூரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய புவனேஸ்வரன், அந்த மாணவிக்கு பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மயக்கி உள்ளார். சிறுமியை வீடியோ காலில் ஆபாசமாக தோன்றும்படி கூறி அதனை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் தனது ஆபாச வீடியோவை வைத்து புவனேஸ்வரன் மிரட்டியதால் அவருடன் நட்பை முறித்துக் கொண்ட அந்த மாணவி, தமிழரசன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரன், தமிழரசனிடம் சென்று மாணவியின் அந்தரங்க வீடியோக்களை காண்பித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தமிழரசன் அந்தரங்க வீடியோ விவகாரத்தை மாணவியின் தந்தையிடம் கூற , அவர் இது குறித்து கேட்டு புவனேஸ்வரனின் சண்டையிட்டுள்ளார்.

மாணவியின் தந்தை தமிழரசன் மூலம் பணம் கொடுத்து 10 பேர் கொண்ட கூலிப்படையை ஏவிய நிலையில், தமிழரசன் புவனேஸ்வரனை மது அருந்த காரில் அழைத்துச்சென்று திட்டமிட்டபடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலையில் தொடர்புள்ள தமிழரசன் மற்றும் கூலிப்படையினரை 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments