தூத்துக்குடியில் சாலையில் குளம்போல் தேங்கிய குடிநீர்... வீணாவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 388

தூத்துக்குடி நகரில் ஜெய்லானி தெரு, பங்களா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்க் குழாய் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இன்று காலை அந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடங்கியபோது, குழாயில் கசிவு ஏற்பட்டு, தெற்கு சம்பந்தமூர்த்தி சாலையில் குளம்போல் குடிநீர் தேங்கி வீணானது. பழுதை உடனே சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments