விதவை உதவித் தொகைக்காக விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ... புதிதாக அமலுக்கு வந்த BNSS பிரிவின் கீழ் கைது

0 493

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அரசு வழங்கும் விதவைகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மீது இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டமான BNSS பிரிவின் கீழ் முதல் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் தனது மகளுக்காக விதவை உதவித்தொகை பெற கிராம நிர்வாக அலுவலர் பூமிச்சந்திரனை அணுகியபோது அவர் லஞ்சம் கேட்டதாக  இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து பாண்டித்துரை கொடுத்த லஞ்சப்பணத்தை வாங்கியபோது பூமிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments