கல்விக் கொள்கை குறித்த 600 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...
தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், டெட் எனப்படும் அரசு பள்ளி ஆசிரியர் தேர்வு முறை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், பாட புத்தகத்தை மனப்பாடம் செய்தால் டெட் தேர்வில் வெற்றி பெறலாம் என்பதை மாற்றி, கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் வகையில் அத்தேர்வை அமைக்கவேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் 2 முதல் 4 பாடவேலைகளில் மாணவர்களை விளையாட அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
"ஸ்போக்கன் இங்கிலீஷ்" தவிர "ஸ்போக்கன் தமிழ்" மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும், உயர்கல்வியில் புத்தங்களின் உதவியுடன்மாணவர்கள் தேர்வு எழுதும் 'open book assessment' என்ற முறை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளையும் இக்குழு வழங்கியுள்ளது.
Comments