கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுநரிடம் பணம், செல்ஃபோன் பறிப்பு - கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது

0 453
கத்தியைக் காட்டி மிரட்டி ஓட்டுநரிடம் பணம், செல்ஃபோன் பறிப்பு - கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது

சென்னை காசிமேட்டில் கண்டெய்னர் லாரி ஒட்டுனர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்ஃபோன் பறித்ததாக கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 28-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்குள் செல்வதற்காக காசிமேடு சூரியநாராயணன் சாலையில்  வரிசையில் லாரியை நிறுத்தி இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த 2 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களை விரட்டிப் பிடித்து ஓட்டுநர்களே போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் விடுவித்ததற்கு ஓட்டுநர்கள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments