மனைவி, ஒரு வயது குழந்தையுடன் இளைஞர் தற்கொலை முயற்சி.. எலி மருந்து சாப்பிட்டு மயங்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி

0 663
மனைவி, ஒரு வயது குழந்தையுடன் இளைஞர் தற்கொலை முயற்சி.. எலி மருந்து சாப்பிட்டு மயங்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரியில் மனைவி, ஒரு வயது குழந்தையுடன் வியாபாரி ஒருவர் எலி மருந்து தின்றது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தென்னல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் என்ற வியாபாரி, வில்லியனூர் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, விஜயகாந்தின் சட்டைப் பையில் கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.

அதில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர் ஒருவரின் சொத்துப் பத்திரத்தை வாங்கி தங்கள் ஊரைச் சேர்ந்த ரமா தேவி என்பவரிடம் கொடுத்து 5 லட்ச ரூபாய் கடன் கேட்டதாகவும், அவர் பணத்தை தராததுடன் ஏற்கனவே கடன் கொடுத்தது போல போலி ஆவணம் தயாரித்து தம்மை மிரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமா தேவியை தேடிச் சென்ற போது, அவர் குடும்பத்துடன் தலைமறைவானதாக தெரிவித்த போலீசார், விஜயகாந்தின் மனைவி வாணி மற்றும் குழந்தை சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments