பொம்மை துப்பாக்கியை காட்டி சுடுவதுபோல் மிரட்டிய சிறுவன்... ஒரிஜினல் துப்பாக்கி என நினைத்து சுட்ட போலீசார்...
அமெரிக்காவின் யூட்டிகா நகரில் போலீசார் துரத்தி சென்றபோது பொம்மை துப்பாக்கியை காட்டி சுடுவது போல் மிரட்டிய 13 வயது சிறுவன் போலீசார் சுட்டதில் உயிரிழந்தான்.
மியான்மரில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்த சிறுவனை விசாரிப்பதற்காக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது தன்னிடமிருந்த பொம்மை துப்பாக்கியை போலீசாரை நோக்கி சுடுவதுபோல் காட்டியபடி சிறுவன் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
அது ஒரிஜினல் துப்பாக்கி என நினைத்து போலீசார் சுட்டதில் சிறுவன் உயிரிழந்தான்.
Comments