இறந்து விட்டதாக கருதிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்த தனியார் அமைப்பு

0 768

காணாமல் போய், இறந்து விட்டதாக பெற்றோர் கருதிக் கொண்டிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞரை தனியார் அமைப்பு ஒன்று மீட்டு, குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் உள்ள பேருந்து நிழற்குடை அருகே 4 ஆண்டுகளாக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அமர்ந்திருந்த அந்த இளைஞரை அவர்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

6 மாதங்களில் குணமடைந்த அந்த இளைஞர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்து. அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments