செல்போன் பறித்துவிட்டு தப்பியோட முயன்ற 3 சிறுவர்கள்... விரட்டி பிடிக்க முயன்ற காவலருக்கு அரிவாள் வெட்டு

0 669

திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே சிலர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் 5 பேர் அவர்களை பிடிக்கச் சென்றனர். தங்களைப் பார்த்ததும் 3 பேர் ஓடத் துவங்கியதாகவும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அண்ணா சிலை அருகே பிடிக்க முயன்ற போது, 3 பேரில் ஒருவன் கையில் வைத்திருந்த கத்தியால் அப்துல் காதர் என்ற காவலரின் வலது கை மற்றும் கன்னத்தில் வெட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருவதாக கூறினர். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments