நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், டிரம்ப்... ஜோ பைடன் சிறப்பாக செயல்படவில்லை என மக்கள் விமர்சனம்

0 470

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜோ பைடனுக்கும், டிரம்புக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் பைடன் சிறப்பாக செயல்படவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தம்மால் முன்பைப்போல் பேசவோ, நடக்கவோ, விவாதம் செய்யவோ முடியவில்லை என ஜோ பைடன் கூறியுள்ளார்.

வடக்கு கரோலினா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தனக்கு வயதாகி விட்டது என்றபோதும், நல்லது எது கெட்டது எது என்பது நன்றாகத் தெரியும் என்றார். டிரம்புக்கு எதிரான போட்டியில் பின்வாங்கப்போவதில்லை என கூறிய பைடன், நாம் வீழ்வதே மீண்டும் எழுவதற்கு தான் என கூறி உரையை நிறைவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments