மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் மேயருடன் வாக்குவாதம்.. ஜெயலலிதாவை அவமதித்ததாகக் கூறி மேயரை ஒருமையில் பேசிய உறுப்பினர்

0 376

தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக மேயர் ராமநாதனை அதிமுக உறுப்பினர் ஒருமையில் பேசியதால் அங்கு வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

கூட்டம் நடைபெற்றபோது, மாநகராட்சியில் 32 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக உறுப்பினர் மணிகண்டன், பத்திரிக்கை செய்தியை சுட்டிக்காட்டி பேசினார்.

மேயர் ராமநாதன் அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அதனை காதில் வாங்காமல் மணிகண்டன் தொடர்ந்து பேசியதால், ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டு ராமநாதன் விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர் மணிகண்டன், மரியாதை தெரியாதா உனக்கு என மேயரை ஒருமையில் பேசினார்.

மேயருடன் வாக்குவாதம் செய்த அதிமுக உறுப்பினர்களை காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கண்டிக்கவே, அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கையை நீட்டிப் பேசியதைப் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர், கையை உடைத்துவிடுவேன் என ஆவேசமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments