'' புதிய குற்றவியல் சட்டங்கள் - நீதி, காவல்துறைக்கு பயிற்சி '' முதலமைச்சர் ஸ்டாலின்

0 314

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நீதித்துறை மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, 3 புதிய குற்றவியல் சட்டங்களை விவாதம் நடத்தாமலேயே மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாடு முழுவதும் வரும் 1-ஆம் தேதியன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில், குற்றவிவரங்கள் தொடர்பான மென்பொருளும் மாற்றம் செய்யப்படுவதால் அதை மனதில் வைத்து உரிய பயிற்சி வழங்கப்படுவதாக விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments