ஜூலை 3 முதல் ஜியோ, ஏர்டெல் செல்போன் சேவை கட்டணங்கள் உயர்வு
ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைபேசி சேவை நிறுவனங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை கட்டணத்தை அதிகரித்திருப்பதால் செல்ஃபோன் சேவை மற்றும் டேட்டா கட்டணம் உயர்கிறது.
5ஜி தொழில்நுட்ப சேவையை விரிவாக்கம் செய்வது, அதிகரிக்கும் இணைப்புகளுக்கு ஏற்ப நெட்வொர்க் சேவைத் திறனை அதிகரிப்பது ஆகியவற்றுக்காக கட்டண உயர்வு அவசியமாவதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மொத்தமாக சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் எடுத்துள்ள நிலையில், நிதி திரட்ட கட்டண உயர்வை அறிவித்துள்ளன.
கட்டண உயர்வின்படி, ஜியோவின் குறைந்தபட்ச மாத கட்டணம் 155 ரூபாயில் இருந்து 189 ரூபாயாகவும் ஏர்டெல் 179 ரூபாயில் இருந்து 199 ரூபாயாகவும் ஜூலை 3ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளது.
Comments