இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு... கமல், ஷங்கர், லைகா நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0 549

இந்தியன்- 2 திரைப்படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கமலஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனம் விளக்கமளிக்க மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் படத்தில் பயன்படுத்தப்பட்ட வர்மக்கலை முத்திரையை வழங்கியதற்காக வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவரின் பெயர் படத்தில் இடம் பெற்ற நிலையில் 2-ம் பாகத்தில் அவரது ஆலோசனை இன்றி அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக் கூடாது என ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments