பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உயிரிழப்பு... குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் விசாரணை

0 587

திட்டக்குடி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை நாய் கடித்து உயிரிழந்ததாக தாயார் தெரிவித்திருந்த நிலையில், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மாலத்தீவில் பணியாற்றிவரும் சக்திவேல் என்பவரின் மனைவி நந்தினி, அவர்களது 6 வயது மகனையும், ஒரு மாத குழந்தையையும் இங்கிருந்தபடி கவனித்து வந்துள்ளார்.

தாம் கழிவறைக்கு சென்றபோது வீட்டில் உறங்கிகொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கழுத்தில் கடித்துவிட்டதாக கூறிய நந்தினி, பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தையை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடந்தபோது அங்கு வந்த போலீசார், குழந்தையின் கழுத்தில் தாயத்து கயிற்றால் நெரிக்கப்பட்டதற்கான தழும்புகள் இருந்ததாக கூறி விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments