எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பளம் ரூ. 3.3 லட்சம்... அரசு செலவில் 8250 சதுர அடி பங்களா வழங்கப்படும் என தகவல்

0 797

எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சருக்கு இணையாக 8,250 சதுர அடி பங்களா மற்றும் மாதம் 3.3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டைப்-8 குடியிருப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளதாகவும், அங்கு பணியாற்றும் உதவியாளர்களுக்கு 4 சிறிய குடியிருப்புகள் அதே வளாகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விலைக்கு வாங்கினால் சுமார் 100 கோடியும் வாடகை என்றால் பல லட்சமும் ஆகக் கூடிய அந்த பங்களா ராகுலுக்கு இலவசமாக தரப்படுவதுடன் அரசு செலவில் அறைக் கலன்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments