சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின்
ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
Comments