ஓசூரில் விமான நிலையம்.. திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
வளர்ச்சி மிகு தமிழ்நாடாக மாறி வருகிறது - முதலமைச்சர்
பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
தொழில்துறை தொடர்பாக முதல்வர் அறிவிப்புகள் வெளியீடு
நாட்டிலேயே ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்
"ஓசூரில் விமான நிலையம் அவசியம் என அரசு கருதுகிறது"
"ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை"
"ஓசூரில் 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் ஏர்போர்ட்"
"திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்"
"கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம்"
தொழில்துறை தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக உட்கட்டமைப்பு தொழில்புரட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுகிறேன் - முதல்வர்
பெருந்தொழில்கள் துறையில் தமிழகம் வளர்ச்சி பெற்று வருகிறது
தமிழக இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை அதிகரிப்பு
ஏற்றுமதி தரக்குறியீட்டில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
புத்தொழில் வளர்ச்சியில் 2020ல் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடம் பெற்றுள்ளது
ஓசூரில் விமான நிலையம் அமைப்பது முக்கியம் என அரசு கருதுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஓசூரை பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் - முதலமைச்சர்
ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை
கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும்; திருச்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும்
Comments