தனது நாட்டு குடிமகனை மீட்க ஆஸ்திரேலிய அரசு செய்த முயற்சிகள்.. 14 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு அசாஞ்சே விடுதலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 14 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அரசு தனது குடிமகனை மீட்க பெரும் முயற்சி செய்துள்ளது.
வழக்கில் அமெரிக்காவுடன் ஆஸ்திரேலிய அரசு தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியும் வந்தது. ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாக 17 பிரிவுகளில் நடந்த வழக்கில், அசாஞ்சேவிற்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருந்த நிலையில், நேரடியாக ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் தலையிட்டு அவரைக் காப்பாற்ற உதவியிருப்பதாக அசாஞ்சேவின் வழக்கறிஞர் ஜெனிஃபர் ராபின்சன் தெரிவித்தார்.
அதற்கேற்ப, அசாஞ்சேவின் விடுதலை ஆஸ்திரேலியாவின் வெற்றி என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார்.
Comments