நாளை நடக்கிறது த.வெ.க.தலைவர் விஜய் வழங்கும் கல்வி விருதுகள் விழா.. முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
நடிகர் விஜய் வழங்கும் கல்வி விருதுகள் விழா நாளை சென்னை திருவான்மியூரில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
10,12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்குகிறார்.
முதற்கட்டமாக கோயம்புத்தூர், தர்மபுரி,தூத்துக்குடி,திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்குகிறார்..
Comments