சேலத்தில் உறவினர்களுக்கு விருந்தளிக்க சாராயம் காய்ச்சிய நபர் கைது
சேலம் மாவட்டம், தொளசம்பட்டி அருகே குலதெய்வ திருவிழாவிற்கு வரும் உறவினர்களுக்கு விருந்தளிப்பதற்காக சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு வீட்டின் குளியலறையில் வைத்திருந்த சின்னத்தம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி ஓட்டுநரான சின்னத்தம்பி சாராய ஊறல் வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தொளசம்பட்டி காவல் நிலைய போலீசார் சுமார் 50 லிட்டர் சாராய ஊறலையும், சுமார் 2 லிட்டர் காய்ச்சிய சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர்.
Comments