முதல்வரின் சாதிவாரி தீர்மானம் - இபிஎஸ் விமர்சனம்

0 251

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அதிமுக ஆட்சியில் அரசாணை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம்

விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்

முதல்வரின் சாதிவாரி தீர்மானம் - இபிஎஸ் விமர்சனம்

 அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

விஷச்சாராய விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம் - இபிஎஸ்

விதிகளை பின்பற்றி கடிதம் கொடுக்குமாறு சபாநாயகர் கூறினார்; அதன்படி கொடுத்தாலும், சபாநாயகர் பேச அனுமதிக்க மறுக்கிறார் - இபிஎஸ்

சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதில்லை; எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் - இபிஎஸ்

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அவை தலைவர் அரசியல் பேசக்கூடாது - இபிஎஸ்

அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைத்தார்கள்; அதற்காக 2020ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது - இபிஎஸ்

சாதிவாரி கணக்கெடுப்பை 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது - இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments