சிட்டி போலீஸ் முன்ன மாதிரி இல்லையாம் திருட்டு பைக்க கண்டுபிடிக்க சிசிடிவியுடன் இணைந்த நவீன தொழில் நுட்பம் பராக்..! 3200 பைக்கை தேடுகிறார்கள்
சென்னையில் கடந்த 4 வருடங்களில் களவு போன 3200 இரு சக்கர வாகனங்களை கண்டுபிடிக்க போலீசார் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பரங்கிமலையில் திருடப்பட்ட இருசக்கரவாகனத்தை பாரிஸ்கார்னரில் மீட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
3200... கடந்த 4 வருடங்களில் மட்டும் சென்னை நகரத்தில் களவு போய் இதுவரை போலீசாரால் மீட்க இயலாத பைக்குகளின் எண்ணிக்கை..!
இவற்றில் பெரும்பால பைக்குகளை பயன்படுத்தி தான் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதனால் திருட்டு போன வாகனங்களை கண்டு பிடிக்கவும், இனி வாகன திருட்டு நடக்காமல் தடுக்கவும் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய கண்காணிப்பு தொழில் நுட்பத்தை 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை காவல்துறை அமைத்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக நகரில் 28 இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களை இணைத்து கண்காணிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
80 இடங்களில் நிலையான கேமரக்களை பொருத்தியும், 50 இடங்களில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள நகரும் நவீன கேமராக்களை பொறுத்தியும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
களவு போன 3200 வாகனங்களின் எண்கள் அனைத்தும் ஐ.வி.எம்.எஸ் டேட்டா பேஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட வாகனங்கள் இந்த கேமராவை கடக்கும் போது இது குறித்த தகவல் அந்தப்பகுதியில் உள்ள உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையரின் செல்போனுக்கு புகைப்படத்துடன் சென்று விடும்.
உடனடியாக அதனை வைத்து ஓட்டிச்சென்ற நபரை எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார்.
அந்தவகையில் பரங்கிமலையில் திருடப்பட்ட பைக் ஒன்றை இதே தொழில் நுட்பம் மூலம் பாரிஸ்கார்னரில் உள்ள காமிரா மூலம் கண்டறிந்து போலீசார் மீட்டுள்ளனர்.
இதன் மூலம் தினமும் 2 வாகனங்களையாவது போலீசார் கண்டறிந்து வருவதாகவும், விரைவில் அனைத்து திருட்டு வாகனங்களையும் கண்டுபிடிபோம் என்று தெரிவித்தனர்.
இனி திருட்டு பைக்குகளை சிட்டிக்குள் ஓட்டவும் முடியாது, ஓட்டினால் ஒழியவும் முடியாது என்று சிசிடிவி மூலம் செக் வைத்துள்ளது காவல்துறை.
Comments