ஆடல் பாடல் நிகழ்ச்சி மேடையில் வருத்தப்பட்ட வாலிபர்கள் மோதல் போலீஸ் பாதுகாப்புடன் நடனம்..! அதிக டெசிபலுடன் ஒலித்த இசை
வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராமத்தில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் போது உள்ளூர் இளைஞர்கள் இருதரப்பாக மோதிக் கொண்ட நிலையில், ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராமத்தில் கொடமாத்தம்மன் திருவிழாவையொட்டி அந்த ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் போலீஸ் அனுமதியுடன் ஏற்பாடு செய்திருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
மேடையில் நடன மங்கையர் ஆடிக் கொண்டிருந்த போது போதையில் இருந்த சில இளைஞர்கள் மேடை ஏறியதால், மற்றொரு தரப்பு இளைஞர்கள் அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
அங்கு வந்த போலீசார் , போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்துச்சென்ற போது ஒருவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்
அதன்பின்பு இரு காவலர்கள் மேடையில் ஏறி பாதுகாப்புக்கு நிற்க , அறைகுறை ஆடையுடன் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறிய நடன மங்கையர் பாடலுக்கு குத்தட்டம் போட்டனர்
இதனை கட்டிடம் ஒன்றின் மேல் இருந்து சிறுவர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர், கூட்டத்தில் இருந்த சிலர் ஒரே இடத்தில் ஏராளமான ஸ்பீக்கர் வைத்திருப்பதால் அதிக சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கப்படுவதாக, டெசிபல் அளவீட்டு ஆப் மூலம் சுட்டிக்காட்டியதோடு, தொடர்ந்து கேட்பதால் செவித்திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆதங்கப்பட்டார், அவரது குரலை ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை.
Comments