தமிழகத்தின் 39 எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்
தமிழகத்தை சேர்ந்த இந்தியா கூட்டணியின் 39 எம்.பி.க்கள் மக்களவையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி உளமாற உறுதி கூறுவதாக பதவியேற்றுகொண்டார்.
அரக்கோணம் எம்.பியாக ஜெகத்ரட்சகன் பதவியேற்றுக்கொண்டார்.
தென்சென்னை எம்.பி தயாநிதிமாறன் உறுதிமொழி ஏற்ற பின்னர் வேண்டாம் நீட், BAN NEET என கோஷமிட்டார்.
இக்கோஷங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என இடைக்கால சபாநாயகர் தெரிவித்தார். திருவள்ளூர் எம்.பியாக சசிகாந்த் செந்தில் பதவியேற்ற பின்னர் கூறிய கருத்துக்களுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர் எம்.பியாக கதிர் ஆனந்த் பதவியேற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை எம்.பி சுதா, தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது ஆணையாக என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
நாமக்கல் எம்.பி மாதேஷ்வரன், தீரன் சின்னமலை காளிங்கராயன் ஆசியோடு என்று கூறி தனது உறுதிமொழியை வாசித்தார்.
பதவியேற்றுக்கொண்ட தி.மு.க எம்.பி.க்களில் 14 பேர் அமைச்சர் உதயநிதி வாழ்க என முழக்கமிட்டனர்.
Comments