மருமகன் மற்றும் அவரது தந்தையை மாறி, மாறி தாக்கிய மாமியார்...

0 534

மகளை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தாய், மருமகனையும், அவரது தந்தையையும் அரூர் நீதிமன்ற வளாகத்திலேயே மாறி, மாறி தாக்கினார்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா என்பவரின் மகள் சிந்துவிற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின்மகன் வேடியப்பனுக்கும் 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்து 7 மாதங்களில் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே வேடியப்பன்தனது மாமன்மகளை திருமணம் செய்துகொண்டதால் சிந்து விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார்.

இதற்காக அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வேடியப்பன், அவரது தந்தை ஏழுமலையை மல்லிகா தாக்கிய நிலையில், அங்கு வந்த போலீசார் தடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments