சாதி கலவரம் அதிகம் நடப்பதாகக் கூறிய வேல்முருகன் தனிப்பட்ட முறைகள் நடக்கும் பிரச்சனையை ஜாதி கலவரமாக பேசக்கூடாது என சபாநாயகர் அப்பாவு பதில்...

0 443

"எங்கள பத்தி பேசறீங்க நல்லதல்ல, வாயில விழுந்துறாத போ" என சட்டசபையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகனை அவை முன்னவர் துரைமுருகன் எச்சரித்தார்.

சட்டசபையில் பேசிய வேல்முருகன், தென் மாவட்டங்களில் சாதி கலவரம் அதிகம் நடப்பதாகக் கூறியதற்கு, தனிப்பட்ட முறைகள் நடக்கும் பிரச்சனையை ஜாதி கலவரமாக பேசக்கூடாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் உள்ள உணவகம் மிகவும் மோசமான இருப்பதாகக் குறிப்பிட்டபோது, பொத்தம் பொதுவாக பேசக்கூடாது ஏதாவது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேச வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், சில நேரங்களில் அவை முன்னவர் அவை மாண்புக்கு எதிராக செயல்படுகிறார் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments