அமைதிப்புயல் விஜய்..! ரசிகர்களுக்கு திரிஷா சொல்லும் மெசேஜ் என்ன ?

0 959

நடிகர் விஜய்யுடன் ஒரே லிப்டில் இருக்கும் போது தனது செல்போனில் எடுத்த படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, அமைதியான புயல் கரையைக் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதாக பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்

2004 ஆம் ஆண்டு விஜய்யின் ஜோடியாக திரிஷா நடித்து வெளியான கில்லியின் மாபெரும் வெற்றி... 20 வருடங்கள் கடந்து மறு வெளியீட்டிலும் திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட செய்தது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என விஜய்யுடன் 5 படங்களில் நாயகியாக நடித்துள்ள திரிஷா தற்போது விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 20 வருடங்களாக விஜய்யுடனான தனது திரையுலக நட்பை த்ரிஷா தொடர்ந்து வரும் நிலையில், விஜய்யுடன் லிப்டில் பயணிக்கும் போது தனது செல்போனில் எடுத்த படத்தை சண்டே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை திரிஷா. அதில் அமைதியான புயல் கரையைக் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதாக பதிவிட்டு உள்ளார் . இந்த படம் எப்போது எங்கு எடுத்தது ?என்ற விவரம் ஏதையும் அவர் தெரிவிக்காத நிலையில் , இந்த பதிவு மூலம் விஜய்க்கு திரிஷா சொல்லும் சேதி என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் திரிஷாவின் கணக்கில் 28 லட்சம் முறை இந்த புகைப்படம் பார்க்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 11 ஆயிரத்துக்கும் மேல் கமெண்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக திரிஷா இந்த புகைப்படத்தை பதிவிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments