கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 312

கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

 

கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டடம் ஆர்ப்பாளையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி உள்பட ஏராளமானோர் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.

 

இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சாலை மறியல் செய்ய முயன்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

 

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments