நாடாளுமன்ற அரசியலில் இன்றைய தினம் மிகுந்த பெருமைக்குரிய நாள் - பிரதமர் மோடி

0 488

டெல்லி

பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்: பிரதமர்

''நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்''

18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி பேட்டி

நாடாளுமன்ற அரசியலில் இன்றைய தினம் மிகுந்த பெருமைக்குரிய நாள்: பிரதமர்

சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் புதிய எம்பிக்களுடன் அவை கூடுகிறது: பிரதமர்

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்பிக்கள் அனைவரையும் வரவேற்கிறேன்; வாழ்த்து தெரிவிக்கிறேன்: பிரதமர்

நாடாளுமன்ற கூட்டம் சாதாரண மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யும்: பிரதமர்

புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது: பிரதமர்

உலகத்தின் மிகப்பெரிய தேர்தல் மிகுந்த பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்: பிரதமர்

2ஆவது முறையாக ஓர் அரசை மக்கள் தொடர்ந்து 3ஆவது முறையாக தேர்வு செய்திருப்பது நாடாளுமன்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது

140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முழுமையாக உழைப்பை தருவோம்: பிரதமர்

கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும்: பிரதமர்

நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம்: பிரதமர்

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்: பிரதமர்

3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாங்கள் 3 மடங்கு அதிகமாக எங்கள் உழைப்பை தருவோம்: பிரதமர்

18ஆவது நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்: பிரதமர்

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு செயலாற்றும் கடமை அனைவருக்கும் உள்ளது: பிரதமர்

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்களே தவிர முழக்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை: பிரதமர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments