நாளை தொடங்குகிறது 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம்.. பிரதமர் உள்ளிட்ட 279 எம்.பி.க்கள் முதல் நாளில் பதவிப் பிரமாணம்..
பதினெட்டாவது மக்களவையின் முதல் கூட்டம், நாளை தொடங்கவுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த மகதாபுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு காலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
பின்னர் 11 மணிக்கு நாடாளுமன்றம் வரும் மகதாப், முதல் நாளில் பிரதமர் மோடிக்கு முதலாவது நபராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
பின்னர் 279 எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் ஏற்கவுள்ளனர். 25ஆம் தேதி 264 எம்.பி.க்களுக்கு மகதாப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதில் மகதாபுக்கு உதவ காங்கிரசின் சுரேஷ், திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 5 பேர் குழுவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
அடுத்த நாள் 26 ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 27ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.
Comments