ஆர்.எல்.வி புஷ்பக் ஏவுகலன் சோதனை 3ஆவது முறையாக வெற்றி
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று நிலைநிறுத்தி விட்டு பத்திரமாக தரையிறங்கும் ஆர்.எல்.வி புஷ்பக் ஏவுகலனின் கடைசி மற்றும் 3ஆவது சோதனையும் வெற்றிப்பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆர்.எல்.வி புஷ்பக் ஏவுகலனானது ஏற்கனவே 2 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில் 3ஆவது மற்றும் கடைசி சோதனை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா சோதனை தளத்தில் காலை 7.10 மணிக்கு நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரில் இருந்து நான்கரை கிலோ மீட்டர் உயரத்தில் விடப்பட்டு, அங்கிருந்து பாராசூட் மூலம் புஷ்பக்கின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுபாதையில் துல்லியமான கிடைமட்ட தரையிறக்கத்தை நிகழ்த்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Comments