நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கிய 10 தெருநாய்கள்

0 571

ஹைதராபாத்தில் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவரை 10 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாய்கள் விடாமல் கடித்த நிலையில் தன்னுடைய செருப்பைக் கொண்டு தடுத்து சமாளித்த அந்தப் பெண், ஒரு கட்டத்தில் கீழே விழுந்த போதும் ஆக்ரோஷமான நாய்கள் அவரை விடவில்லை..

பின்னர் ஒரு வழியாக எழுந்து நாய்களிடம் இருந்து தப்பினார். இந்த சம்பவத்திற்கு பிறகு நாய்களுக்கு குடியிருப்புக்கு அருகில் உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்தப் பெண்ணின் கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments