விமான நிலையத்தில் அதிவிரைவு இமிகிரேஷன் சோதனை முறை நாட்டிலேயே முதலாவதாக டெல்லியில் தொடங்கி வைத்தார் அமித் ஷா
டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் சோதனைக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் அதிவிரைவு சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகமாகியுள்ள கட்டணமில்லாத இந்த வசதியைப் பெற www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கைரேகை மற்றும் புகைப்படம் இணைக்க வேண்டும். இது குடியேற்ற அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் செய்து அனுமதி வழங்கப்படும்.
6பிறகு, விமான நிலையத்தில் பிரத்யேக மின்னணு வாசல் வழியாக காத்திருக்காமல் இமிகிரேஷன் சோதனையை நிறைவு செய்து பயணிக்க முடியும். இந்த வசதி விரைவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
Comments