நீட் போன்ற பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டம்...
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
தேர்வு சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது சேவை வழங்குபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டாலோ, மறைத்தாலோ இதே அளவுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments