விஷச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருந்து தப்பி வீட்டிற்குச் சென்றவர் உயிரிழப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் விஷச்சாராயம் அருந்தியதாக அரசு மருத்துவ மனையில் 2நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே மருத்துவமனையில் இருந்து யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு வந்து விட்ட அவர் தான் குணமடைந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் இன்று காலை கடும் வயிற்று வலியால் துடித்தவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments