வாலாஜாபாத் அருகே 49 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதித்த சம்பவம்... சிகிச்சை பலன் இன்றி 2 பேர் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே கடந்த வாரம் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த நிலையில், குடிநீரில் இருந்த பாக்டீரியா தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வையாவூர் காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் திறந்தவெளி கிணற்றிலிருந்து குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 49 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனையடுத்து குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலை தொட்டியிலிருந்து குடிநீரை ஆய்வுக்கு அனுப்பியதில் காலிஃபார்ம் என்ற பாக்டீரியா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments