கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால் மதுவிலக்கு சாத்தியப்படலாம்: அண்ணாமலை

0 576

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால் அதற்கான சாத்தியமுள்ளதாகக் கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், விஷச்சாராய உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி அளிப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, இறந்தவர்கள் அனைவருமே ஏழைகள் என்றும் ஈமச்சடங்குகள் செய்யக் கூட பணமின்றி தவிப்பவர்கள் என்றும் கூறினார்.

அப்படிப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறோம் என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments