10ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சியில் சிறியோர் முதல் பெரியோர் வரை பங்கேற்ப்பு

0 336

சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி உள்ள பெத்தன்னன் கலையரங்கம் மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சூரியநமஸ்காரம், பிரணாயாமம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்தனர்.

புதுச்சேரியில் கடற்கரை சாலையில் நடந்த யோகா நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிறியோர் முதல் பெரியோர் வரை ஏராளமானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் மற்றும் முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு பெண்கள், யோகா ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments