உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் யோகா
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது யோகா பயிற்சி... சர்வதேச யோகா தினமான இன்று யோகாவின் சிறப்புகளை விவரிக்கும் ஒரு செய்தித்தொகுப்பு இதோ உங்களுக்காக..
மனசஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே தொழில், உடலை வருத்திக் கொள்வதே கொள்கை என சோகம், கோபம், பதற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், மூட்டுவலி என ஒரு கட்டத்தில் நோய் இவர்களைத் தேடி வருகின்றன.
இவற்றில் சிக்காமல் உடலைப் பாதுகாப்பதுதான் யோகா பயிற்சி.. உடலுக்கு உகந்த உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் சேரும்போது உடலும் மனமும் வலுவடைகின்றன.
ஆசனம், பிராணாயாமம், தியானம் இவற்றை தொடர்ச்சியாக செய்வதால் உடல் உறுப்புகள் சீராகி இயல்பாக இயங்குகின்றன.
சீரான மூச்சுக்கும், நாடித்துடிப்பிற்கும் உதவுகிறது யோகா பயிற்சி.. உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது யோகா பயிற்சி..
உடலையும் மனதையும் உறுதியாக்கி, எதையும் தாங்கும் பக்குவத்தையும் நோய்கள் நெருங்க விடாத சக்தியையும் கிடைக்கச் செய்கிறது யோகா பயிற்சி...முதுமைப் பருவத்தைத் தள்ளிப்போட வைக்கிறது யோகா பயிற்சி..
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் யோகா பயிற்சியை செய்வது ஒவ்வொருவருக்கும் அவசியம்.. தினசரி யோகா செய்தால் முதுமையில் இருந்தும், நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்பது நிச்சயம்.
இன்று சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
அன்றாட வாழ்க்கையில் யோகா பயிற்சி அவசியம்
Comments