தலைநகர் டெல்லியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு
டெல்லியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ள நிலையில், கோடை வெயிலை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை பேரிடர் நிர்வாக ஆணையமான DDMA வெளியிட்டுள்ளது. இதன்படி, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாகம் எடுக்காவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், அதிக கனமில்லாத இறுக்கமில்லாத மென்மையான ஆடைகளை அணிய வேண்டும், வெளியே செல்வோர், குல்லா, தொப்பி காலணிகள், கண்களுக்கு பாதுகாப்பு தரும் குளிர் கண்ணாடிகள், குடைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்லுமாறும் DDMA அறிவுறுத்தியுள்ளது.
Comments