யூஜிசி-நெட் தேர்வு ரத்து... மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்தியக் கல்வி அமைச்சகம்
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சுமார் 9 லட்சம் பேர் எழுதிய யூஜிசி-நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும் இளநிலை ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் ஜூன் மாத முதற்கட்ட நெட் தேர்வு 300க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்டது.
இத்தேர்வில் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு பிரிவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments