கும்மிடிப்பூண்டி சென்ற ரயில் பழுது காரணமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

0 465

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயிலில்  ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். மின்சாரம் கடத்தும் கொக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டது. தொடர்ந்து புறநகர் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு மீஞ்சூர் ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டு பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments