மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, வாரணாசி விமான நிலைய விரிவாக்கம், மகாராஷ்டிராவில் தஹானு அருகே வாதவான் துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நெல் குவிண்டாலுக்கு 117 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் விவசாயிகளுக்கு மொத்தம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 முக்கிய பொருளாதார முடிவுகளாக 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Comments