ஒருவழி பாதையில் வந்தவரை காவலர் தடுத்ததால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்
சென்னையில் ஒரு வழிப்பாதையில் வந்த மாநகராட்சி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போக்குவரத்து காவலரை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.
பேசின் பாலம் அருகே பள்ளிகளை ஒட்டியுள்ள சாலை, காலை 9 மணிக்கு மேல் தடுப்புகள் போடப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை அவ்வழியாக வந்த மாநகராட்சி ஊழியரை தடுத்து நிறுத்திய காவலர் மணிகண்டன், எதற்காக ஒரு வழி பாதையில் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு எங்க ஏரியாவில் எப்படி வேண்டுமானாலும் வருவேன் என்று அவர் திமிராக பதில் கூறியுள்ளார்.
உடனே போக்குவரத்து காவலர் மணிகண்டன், தன் செல்போனை எடுத்து வண்டியின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுக்க சென்ற போது மிரட்டும் தொனியிலும் தகாத வார்த்தையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
Comments