பச்சையப்பன் சிலைக்கு மாலை போட முயன்ற பாரிஸ் ரூட்டை சேர்ந்த மாணவர்கள்.. நுழைவுவாயிலை பூட்டிய கல்லூரி முதல்வர்..
பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் பாரிஸ் ரூட்டை சேர்ந்த மாணவர்கள் சிலர் காலை 11.50 மணியளவில் ஊர்வலமாக வந்து கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை போட முயன்ற நிலையில்,10 மணிக்கு மேல் உள்ளே அனுமதியில்லை எனக் கூறி, கல்லூரி முதல்வர் அவர்களை வெளியேற்றி நுழைவு வாயிலை பூட்டினார். போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டனர்.
கல்லூரி வாசலில் கூடிய மாணவர்கள், பிராட்வே சென்ற மாநகரப் பேருந்தில் ஏறி படிக்கட்டில் தொங்கிய படி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். ஓட்டுநர் பேருந்தை ஓரம்கட்டி நிறுத்திவிடவே, ரோந்து போலீசார் வந்து மாணவர்களைக் கண்டித்தனர்.
மாணவர்கள் அடங்காததால், அவர்களுடனேயே போலீசாரும் பேருந்தில் பயணித்தனர். இதேபோல் பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்த பிராட்வே ரூட்டைச் சேர்ந்த மாணவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Comments