பள்ளிப்பருவ காதலை தடுக்க பெண் காவல் ஆய்வாளருக்கு அட்வைஸ் கொடுத்த கலெக்டர்..! கூல்லிப் முதல் துப்பாக்கி வரை

0 1152

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சாந்தி, சினிமா மற்றும் டிவி பார்த்து பள்ளி மாணவிகள் காதல் வயப்படுவதை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பள்ளியாக சென்று போக்சோ வழக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சாந்தி காவல் நிலையத்தில் சிசிடிவிக்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா ? என்று பார்த்த போது, கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் லாக் - அப் அறை தெரியும் படி சிசிடிவி வைக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்த கலெக்டர் சாந்தி, செல்போன் கிடைத்தால் கண்டு பிடித்து தருவோம் என்று செல்போன் மாயமான வழக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு, இது எப்படி சரியாக இருக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பினார்.

அதே போல 16 வயது சிறுமிகள் சிலர் மாயமானதாகவும், காதல் வயப்பட்டு சென்றவர்களை கண்டுபிடித்து விட்டதாகவும், அழைத்துச்சென்ற இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு போடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கவனித்த கலெக்டர் சாந்தி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பள்ளி மாணவ மாணவிகள் காதல் வயப்படுவதை தடுக்க , விழிப்புணர்வு வழங்க அறிவுறுத்தினார்.

காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களை கொண்டு வரச்சொல்லி சரி பார்த்துவிட்டு புறப்பட்டுச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments