யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது - தமிழிசை

0 853

தமிழகத்தில் பொது மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பா.ஜ.க. மாநில மையக்குழுக் கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் என்றார்.

டி.என்.பி.எஸ்.சி. போன்ற மாநில தேர்வுகள் பலவற்றில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய தமிழிசை, அதற்காக அந்தத் தேர்வையே கைவிட்டு விட்டனரா என்றும் கேள்வி எழுப்பினார்.

தனியார் நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துவதில் வேண்டுமானால் தமிழக அரசு கவனம் செலுத்தலாம் என்றும் அதற்காக நீட் தேர்வே கூடாது என கூறுவது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார். யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments